கிணத்துக்கடவு அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து; மஞ்சிகள் எரிந்து நாசம்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே காட்டம்பட்டியிலிருந்து திருப்பூர் செல்லும் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு தொழிற்சாலைக்கு வெளியே மஞ்சிகள் உலர வைக்கப்பட்டு, பண்டல்களாக கட்டி வைக்கப்பட்டிருந்தன. நேற்று அதிகாலை திடீரென தொழிற்சாலையிலிருந்து புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதற்குள் தீ மளமளவென உலர வைக்கப்பட்ட மஞ்சிகளில் பரவியது. விரைந்து வந்த கிணத்துக்கடவு தீயணைப்பு வீரர்கள்  தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

மேலும் தீயை கட்டுப்படுத்த கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்பு வண்டி வரவழைக்கப்பட்டு இரண்டு வண்டிகளில் தீயை அணைக்க தண்ணீர் அடிக்கப்பட்டது.காலை 9  மணி வரை 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள தென்னை நார் மஞ்சிகள் எரிந்து நாசமாயின. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: