ரூ1.8 லட்சம் கோடி கடனில் சிக்கி தவிக்கும் நிலையில், வோடபோன் ஐடியா குழும வாரிய இயக்குனர் குமார் மங்கலம் பிர்லா ராஜினாமா!!

மும்பை : வோடபோன் ஐடியா குழுமத்தின் வாரிய இயக்குனர் பொறுப்பில் இருந்து குமார் மங்கலம் பிர்லா விலகி இருக்கிறார்.நிர்வாகமற்ற இயக்குனர் மற்றும் நிர்வாகமற்ற தலைவராக இருந்த குமார் மங்கலம் பிர்லாவின் விலகல் கோரிக்கையை வோடபோன் ஐடியா வாரிய இயக்குனர்கள் குழுமம் உடனடியாக ஏற்றுக் கொண்டுள்ளது.தற்போதைய நிர்வாகமற்ற இயக்குனர் ஹிமான்ஷு கபனியாவை வோடபோன் ஐடியா நிர்வாகத்தின் நிர்வாகமற்ற தலைவராக வாரிய இயக்குனர்கள் குழு ஒருமனதாக தேர்வு செய்துள்ளது

தொலைத்தொடர்பு துறையில் நிலவும் கடும் போட்டி காரணமாக வோடபோன் ஐடியா நிறுவனம், ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி தவிக்கிறது.இந்த நிலையில், ஆதித்ய பிர்லா குழுமத்தின் வசமுள்ள பங்குகளை அரசுக்கோ அல்லது தனியார் நிறுவனத்திற்கோ கொடுக்க தயாராக இருக்கிறோம் என குமார் மங்கலம் பிர்லா அண்மையில் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>