சென்னையில் சற்று இறக்கம் : ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.36,208-க்கு விற்பனை...!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று இறக்கத்துடன் காணப்படுகிறது. ஒரு நாள் சிறிதளவு குறைந்தாலும் அடுத்த நாளே மிகப் பெரிய அளவில் உயர்த்தப்படுகிறது. இதனால் நகை வாங்குவோர் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

தற்போது, இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.36,208-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,526 க்கும் ஒரு சவரன் ரூ.36,208 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது நேற்று வெள்ளியின் விலை ரூ.73.10 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 80 காசுகள் குறைந்து ரூ.73.30 என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூ73,300 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>