தஞ்சாவூரில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த தடுப்பு வேலியை அகற்றியபோது இரு பிரிவினரிடையே மோதல்: 9 பேர் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் கோவில் நிலத்தில் வேலி போட்டதாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரத்தநாடு அருகே பொய்யுண்டார்கோட்டை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான கோயில் நிலம் உள்ளது. இந்த கோயில் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த சின்னராஜா என்பவர் நிலத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளார். ஆக்கிரமித்து அதில் தடுப்பு வேலி அமைத்து அவருக்கு சொந்தமாக்க முயற்சித்துள்ளார். இதனை பார்த்த ஊர்மக்கள் கோயில் பெரிதாக கட்டப்போறதாக கூறி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரியுள்ளனர். பின்னர் நேற்று மாலை 6 மணி அளவில் தடுப்பு வேலிகளை அகற்றியுள்ளனர்.

அப்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சின்னராஜா என்பவர் அரிவாள், வாள் போன்ற ஆயுதங்களை கொண்டு பொதுமக்களை வெட்ட வருகிறார். அவர் தாக்கியதும் மற்ற நபர்களும் உருட்டுக்கட்டை, அரிவாள், வாள் போன்றவற்றால் கடுமையாக தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதலில் 10 பேருக்கு காயம் ஏற்படுகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட சின்னராஜா உள்ளிட்ட 9 பேரை ஒரத்தநாடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காயமடைந்த 10 பேரும் ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>