41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்ஸ் ஹாக்கியில் பதக்க கனவை நிறைவேற்றியது இந்திய ஆடவர் ஹாக்கி அணி

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்:  ஆடவர் ஹாக்கி போட்டியில் விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது. வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் ஜெர்மனியை 5-4 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்ஸ் ஹாக்கியில் பதக்க கனவை இந்திய ஆடவர் ஹாக்கி அணி நிறைவேற்றியுள்ளது. ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலத்திற்கான போட்டி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

இதில் உலகின் பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை  இந்திய ஆடவர் ஹாக்கி அணி எதிர்கொண்டது. 2004 ஏதன்ஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இருந்து 16 ஆண்டுகளாக ஜெர்மனிய அணி ஒரு பதக்கத்தையாவது கைப்பற்றும். அப்படி பட்ட பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை இந்திய அணி எதிர்தொண்டது. இந்த போட்டியில் தொடக்கம் முதலே இந்திய அணி  முன்னணி வகித்தது. சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

1980-ல் மஸ்கொ வில் நடைபெற்ற போட்டியில் பாஸ்கரன் தலைமையிலான இந்திய அணி தங்க பதக்கத்தை வென்றது. அதன் பின்னர் 41 ஆண்டுகளாக இந்தியாவிற்கு ஹாக்கியில் பதக்கம் கிடைக்கவில்லை. 1928,1932 என  தொடர்ந்து 6  முறை தங்கப்பதக்கத்தை வென்று உலகின் எந்த ஒரு அணியாலும் அசைக்க முடியாத அணியாக இந்தியா  அணி திகழ்ந்தது.

அப்படி பட்ட இந்திய அணியின் பதக்க கணவனது  கடந்த 40 ஆண்டுகளாக நிறைவேறாமலே இருந்தது. கடந்த 2016-ம் ஆண்டு முதலே சர்வதேச போட்டிகளில் தனது திறனை இந்திய அணி வெளிப்படுத்தி வந்தது. ஒலிம்பிக்கில் மட்டும் இந்திய ஹாக்கி அணி இதுவரை 11 பதக்கங்களை பெற்றுள்ளது. அதில் 8 தங்கப்பதக்கம் ஆகும். .

உலக அளவில் இந்தியா ஹாக்கி அணி இழந்த பெருமையை மீண்டும் பெற்றுள்ளது. 2016-ம்ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் முதல் இடத்தை பெட்ரா நிலையில் மிக தரம் வாய்ந்த திறமையான அணியாக டோக்கியோ ஒலிம்பிக்கிற்குள் இந்திய அணி காலடி எடுத்து வைத்தது. அதன் விளைவாக 41 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்திய அணி ஹாக்கி அணி ஒரு பதக்கத்தை வென்றுள்ளது.

Related Stories: