ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா அசத்தல்

ஆண்கள் ஈட்டி எறிதல் ஏ பிரிவு தகுதிச்சுற்றில் முதல் இடம் பிடித்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பைனலுக்கு முன்னேறி பதக்க நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். மற்றொரு இந்திய வீரர் சிவபால் சிங் தகுதிச் சுற்றுடன் வெளியேறினார்.ஏ பிரிவில் நீரஜ் உள்பட மொத்தம் 16 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். அதில் நீரஜ்  முதல் வாய்ப்பிலேயே 86.65 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து நேரடியாக பைனலுக்கு முன்னேறி சாதனை படைத்தார். மற்ற வீரர்கள் பின்தங்கியதால் நீரஜ் அடுத்த வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. இந்த பிரிவில் அவர் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

2வது  இடம் பிடித்த ஜெர்மனி வீரர்  ஜோஹன்னஸ்  வெட்டர் (85.64 மீட்டர்),  3வது இடம் பிடித்த பின்லாந்து வீரர் லாஸ்ஸி  எடெலடலோ (84.50மீட்டர்) ஆகியோர் உள்பட 7 வீரர்கள்  இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தனர்.பி பிரிவு தகுதிச்சுற்றில் பங்கேற்ற 16 நாடுகளைச் சேர்ந்த வீரர்களில்  இந்திய வீரர்  சிவபால் சிங் 12வது இடம் பிடித்தார். அவர்  76.40 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை வீசினார். அந்தப் பிரிவில் முதல் இடம் பிடித்த   பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் (85.16), 2வது இடம் பிடித்த செக் குடியரசு வீரர்  ஜேக்கப் வட்லேச் (84.93), பிரிட்டன் வீரர் ஜூலியன் வெபர் (84.41மீட்டர்) ஆகியோர் உள்பட 5 பேர் பைனலுக்கு முன்னேறியுள்ளனர். இறுதிச்சுற்று போட்டி நாளை மறுநாள் மாலை நடைபெற உள்ளது.

Related Stories:

>