வரும் உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றிக்கு அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்: சித்தாமூர் கிழக்கு ஒன்றியத்தில் தீர்மானம்

செய்யூர்: சித்தாமூர் கிழக்கு ஒன்றியத்தில் வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது, கட்சி நிர்வாகிகள் திமுகவின் வெற்றிக்காக அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டமாக விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தல் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதையொட்டி, மேற்கண்ட 9 மாவட்டங்களில் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. இதைதொடர்ந்து, காஞ்சி தெற்கு மாவட்டம் சித்தாமூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. அதில் 18 ஊராட்சி தலைவர்கள், 8 கவுன்சிலர்கள், 1 மாவட்ட கவுன்சிலர் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு தேர்தலை சந்திப்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.

அப்போது, தேர்தலின்போது கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றுபட்டு திமுக வெற்றிக்காக ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சித்தாமூர் ஒன்றிய செயலாளர்கள் சிற்றரசு, ஏழுமலை, வெடால் ராமலிங்கம், ஜனனி ராஜா கிருஷ்ணமூர்த்தி, கட்சி நிர்வாகிகள் ஐயப்பன், பால்ராஜ், ரவிக்குமார், தனசேகர், ரவீந்திரநாத், நிர்மல்குமார், ராஜேந்திரன், தர்மன், கண்ணகி, கண்ணன், பூலோகம், கதிரேசன், கிருஷ்ணன், முருகன், சேகர், கணேசன், சங்கர், வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: