வீட்டுக்குள் அழைத்து சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை: டிரைவர் கைது

ஆவடி: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், தென்றல் நகர் கிழக்கு, காந்தி தெருவில் ஒரு தம்பதி வசிக்கின்றனர். இவர்களுக்கு 12 வயதில் மகள் உள்ளாள். இவள் 7ம் வகுப்பு படிக்கிறாள். இந்நிலையில், நேற்றுமுன்தினம் சிறுமி வீட்டிலிருந்து கடைக்கு சென்றுள்ளார். பின்னர், அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, பெற்றோர் அவளை பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து, திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், போலீசார், அப்பகுதி கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

அப்போது, அதே பகுதி திருவள்ளுவர் தெருவில் வசிக்கும் குமரேசன் (29). தனியார் நிறுவன டிரைவர் என்பவரது வீட்டுக்குள் சிறுமி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவரது வீட்டுக்குள் சென்று சல்லடைபோட்டு தேடினர். அப்போது, சிறுமி பாத்ரூமில் பூட்டி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. சிறுமியை போலீசார் மீட்டனர். விசாரணையில், தெருவில் சென்றபோது குமரேசன் வீட்டுக்குள் அழைத்து பாலியல் தொல்லை செய்துள்ளார். அப்போது, சத்தம் போட்டு அலறியதால் அக்கம் பக்கத்தினர் வந்து விடுவார்களே என பயத்தில் சிறுமியை குமரேசன் வீட்டு பாத்ரூமில் தள்ளி வெளிப்புறமாக கதவை பூட்டியது தெரியவந்தது.

இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்படி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். வீட்டில் பதுங்கியிருந்த குமரேசனை நேற்று கைதுசெய்தனர். மேலும், போலீசார் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>