பால்கனி இடிந்து மூதாட்டி பலி

சென்னை: மயிலாப்பூர் பக்தவச்சலம் சாலையில் உள்ள சுமந்த் குடியிருப்பில் வசித்து வருபவர் பத்மஜாதேவி(82). நேற்று முன்தினம் வீட்டில் துவைத்த துணியை 2வது மாடியில் உள்ள பால்கனிக்கு சென்று காயப்போட்டுள்ளார். அப்போது திடீரென பால்கனி இடிந்து விழுந்ததில் தவறி விழுந்து படுகாயமடைந்தார். குடியிருப்புவாசிகள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த மயிலாப்பூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories:

>