தூய்மைப்பணியாளர்களின் மறுவாழ்விற்கு ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன? மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி

சென்னை: தூய்மைப் பணியாளர்களின் மறுவாழ்விற்கு ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன என்று மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி எழுப்பினார். அதற்கு ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையமைச்சர் பதிலில், ‘தூய்மைப் பணியாளர்களின் நிலை ஓரளவிற்கு மேம்பட்டுள்ளது. தரமுள்ள உபகரணங்களை வழங்குவதற்கு, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மேலும் முதலீடு செய்வது தேவையாகிறது. மேலும், கழிவுநீர் வடிகால்களை நிர்வகிக்கவும், கழிவுநீர் தொட்டிகளை தானியங்கி கருவிகளின் உதவியால் இயக்கவும், தேவையான நிதி உதவியை ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர வளர்ச்சித் துறை அளித்து வருகிறது. மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றிடும் அவலத்தைத் தடுக்கும் நோக்கத்துடன், அதற்கான வாகனங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கு, ஐந்து லட்சம் ரூபாய் வரையில், ஒன்றிய அரசு மானியம் வழங்கி வருவதாகவும், இதுவரையில் இதற்கான பணிகள் 246 நகரங்களில் நடைபெற்று வருகின்றன’ எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: