உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜவில் 17 பேர் கொண்ட மாநில குழு: அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள, தமிழக பாஜவில் 17 பேர் கொண்டு மாநில குழுவை தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தலுக்கான மும்முரத்தில் தமிழக கட்சிகள் உள்ளன. இந்நிலையில், இத்தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக பாஜவும் அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி, உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மாநில குழுவை தமிழக பாஜ நியமித்துள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அதன்படி, உள்ளாட்சி தேர்தலுக்கான மாநிலக் குழு பட்டியலில், பொன்.ராதாகிருஷ்ணன், நையினார் நாகேந்திரன், கே.பி.துரைசாமி, எம்.என்.ராஜா, கே.டி.ராகவன், செல்வகுமார், பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன், நாகராஜன், கார்த்தியாயினி, வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, சி.கே.சரஸ்வதி, சசிகலா புஷ்பா, நரசிம்மன், கே.பி.ராமலிங்கம், கு.க.செல்வம், சம்பத் ஆகிய 17 பேர் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories: