இந்தியாவில் அதிகரிக்கும் வறுமை: 2011-12-ம் ஆண்டு வரை குறைந்து கொண்டிருந்த ஏழைகளின் எண்ணிக்கை மீண்டும் உயர்வு

டெல்லி: இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துக் கொண்டே செல்வது புள்ளி விவரங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது. 2011 - 12-ம் ஆண்டு வரை குறைந்து கொண்டிருந்த ஏழைகளின் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தொழிலாளர் ஆற்றல் குறித்த ஆய்வுகளின் படி 1973 முதல் 2012 வரை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்துள்ளது. 1973 -74-ம் ஆண்டில் 54.9%-ஆக இருந்த வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் எண்ணிக்கை 1983-84-ம் ஆண்டில் 44.5%-ஆகவும், 7993-94-ம் ஆண்டில் 36.0%-ஆகவும், 2004-05-ம் ஆண்டில் 27.5 விழுக்காடாகவும் குறைந்தது.

கிராமப்புறத்தில் நுகர்வு செலவு 2012-க்கும் 2018-ம் ஆண்டுக்கும் இடையே 8% அளவுக்கு குறைந்துள்ளது. அதே நேரத்தில் நகர்புறத்தில் நுகர்வு செலவு 2% அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனிடையே 2019-20-ம் ஆண்டில் அனைத்து பகுதிகளிலும் வறுமை, அதிகரிப்பு, கிராமப்புறங்களில் மிக அதிகமானது வறுமை. வறுமைக்கோடு கணக்கெடுப்பு தொடங்கிய பிறகு முதல்முறையாக இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதாவது கிராமப்புறங்களில் 2012-ம் ஆண்டு 21.67 கோடி ஏழைகள் இருந்த நிலையில் 2019-20 -ம் ஆண்டில் ஏழைகளின் எண்ணிக்கை 27 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுவே நகர்ப்புற ஏழைகளின் எண்ணிக்கை 5.31 கோடியில் இருந்து 7.1 கோடியாக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக ஏழைகளின் எண்ணிக்கை 7 கோடி என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் நுகர்வோர் செலவு கணக்கெடுப்பு தொடங்கிய பிறகு முதல் முறையாக 2012-13 முதல் 2019-20 வரையிலான காலத்தில் ஏழைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

Related Stories: