ஷில்பா கணவர் கைதை தொடர்ந்து ஆபாச பட வழக்கில் சிக்கிய மற்றொரு பாலிவுட் நடிகை: முன்ஜாமீன் மனுவை நிராகரித்தது நீதிமன்றம்

மும்பை: ராஜ்குந்த்ராவின் ஆபாச பட வழக்கில் தொடர்புடைய மற்றொரு நடிகையின் முன்ஜாமீன் மனுவை மும்பை கூடுதல் அமர்வு நீதிபதி நிராகரித்தார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை குற்றப்பிரிவு போலீசார் கடந்த பிப்ரவரியில் ஆபாச படம் தயாரித்து ஆப்ஸ்கள் மூலம் வெளியிட்ட விவகாரம்  தொடர்பாக வழக்கு பதிவு செய்திருந்தனர். தொடர் விசாரணைக்கு பின்னர்,  பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ரா, அவரது கூட்டாளியான  ரியான் தோர்பே ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.

தற்போது அவர்கள்  நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் மற்றொரு  குற்றவாளியான மாடல் அழகியான ஷெர்லின் சோப்ராவின் முன்ஜாமீன் மனுவை  நீதிமன்றம் சமீபத்தில் நிராகரித்தது. இந்நிலையில், இதே ஆபாச பட வழக்கில் தொடர்புடைய மற்றொரு நடிகை கெஹனா வசிஸ்த் என்பவரின் பெயரும் எப்ஐஆரில் உள்ளதால், அவர் தன்னை போலீசார் கைது செய்ய கூடாது எனக்கூறி முன்ஜாமீன் கேட்டு மும்பை கூடுதல் அமர்வு நீதிபதி சோனாலி அகர்வால் முன் மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார். மாறாக, இம்மனு மீதான விசாரணையை நாளை மறுநாளுக்கு (ஆக. 6) ஒத்திவைத்தார். அப்போது நீதிபதி கூறுகையில், ‘தற்போதைய எப்ஐஆரின்படி பார்த்தால் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானதாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களிடம் முத்தக் காட்சிகள் மற்றும் பாலியல் காட்சிகளை படமாக்க கட்டாயப்படுத்தியது தெரியவந்துள்ளது. இத்தகைய குற்றச்சாட்டுகள் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, இடைக்கால நிவாரணமாக முன்ஜாமீன் வழங்க முடியாது’ என்று தெரிவித்தார்.

Related Stories:

>