அமெரிக்காவில் 11 பெண்களிடம் சில்மிஷம் நியூயார்க் ஆளுநர் மீது பாலியல் புகார் நிரூபணம்: ஜோ பிடன் வலியுறுத்தியும் பதவியை ராஜினாமா செய்ய மறுப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் 11 பெண்களிடம் பாலியல் சீண்டல் செய்த குற்றச்சாட்டில் சிக்கிய நியூயார்க் ஆளுநர், தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்து வருவதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ (63) மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், நியூயார்க் மாநில சட்டமன்றத்தின் சபாநாயகர் கார்ல் ஹீஸ்டி, ஆண்ட்ரூ கியூமோ  மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உத்தரவிட்டார். தொடர் விசாரணை நடைபெற்ற நிலையில், மாநில  அட்டர்னி ஜெனரல் 168 பக்க அறிக்கையை சமர்ப்பித்தார். அதில், ‘குற்றம்சாட்டப்பட்ட ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ, 11 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அலுவலகத்தில் ஏற்கனவே பணியாற்றிய, பணியாற்றும், அலுவலகம் அல்லாத வகையில் என 11 பெண்கள் புகார் அளித்துள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் நடந்த வீடியோ கான்பரன்ஸ் விசாரணையில், அவர் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அதிபர் ஜோ பிடன் கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்த கியூமோ, ‘நான் யாரையும் தகாத முறையில் தொட்டதில்லை. அதனால், நான் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை’ என்றார்.

இதுகுறித்து சபாநாயகர் நான்சி பெலோசி கூறுகையில், ‘உண்மையை வெளிப்படுத்திய பெண்களை பாராட்டுகிறேன். நியூயார்க் மக்களின் அன்பையும், மரியாதையும் பெற வேண்டி, ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என்றார்.

கொரோனா காலத்தில் நியூயார்க்கில் ஏற்பட்ட நெருக்கடியான சூழலை சவாலாக எதிர்கொண்ட கியூமோ, அப்போது மக்களிடம் பாராட்டை பெற்றார். ஆனால், அந்த காலகட்டத்தில் பல பெண்களிடம் பாலியல் சீண்டல்களை வெளிப்படுத்தியது, தற்போது அம்பலமாகி உள்ளது. இவ்விவகாரம் கடந்த மார்ச் மாதத்தில் வெளியான போது, கியூமோ மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர் பதவி விலக வேண்டும் என்று அதிபர் ஜோ பிடன் கூறியது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்யாமல் இருப்பதால் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளார்.

Related Stories: