கடலூரில் மருத்துவம் சார்ந்த பணியிடங்களுக்கு நேர்காணல் அழைப்பு!: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலைமோதிய கூட்டத்தால் தொற்று பரவும் அபாயம்..!!

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் மருந்தாளர்கள், கதிர்வீச்சாளர் உட்பட 73 காலி பணியிடங்களுக்கான நேர்காணலில் பங்கேற்பதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று சூழ்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் மருந்தாளர்கள், கதிர்வீச்சாளர், ஆய்வக நுட்ப உதவியாளர் உள்ளிட்ட 73 காலி பணியிடங்களுக்கு இன்று நேர்காணல் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையடுத்து நேர்காணலில் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். அங்கு முறையான ஏற்பாடுகள் செய்யாமலும், சமூக இடைவெளி இல்லாமலும் ஆண்களும், பெண்களும் ஒரே இடத்தில் அமரவைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நேர்காணலில் பங்கேற்க தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வந்ததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மற்றொரு நாளில் உரிய ஏற்பாடுகளுடன் நேர்காணல் நடக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் நேர்காணலில் பங்கேற்க வந்த இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கொரோனா தொற்றானது தீவிரமாக பரவக்கூடிய சூழலில் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியதால் தொற்றானது மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: