×

பெகாசஸ் விகாரத்தை எழுப்பி மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக திரிணாமுல் காங். எம்.பி.கள் 6 பேர் இடைநீக்கம்

டெல்லி: பெகாசஸ்  விகாரத்தை எழுப்பி மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக திரிணாமுல் காங். எம்.பி.கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற மாநிலங்களவையில் கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தியதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சார்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரை மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்து அவை தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தை பொறுத்தவரையில் கடந்த ஜூலை மாதம் 19-ம் தேதியில்  இருந்து மழைக்கால கூட்டத்தொடரானது நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் ஆரம்பித்த நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் பல்வேறு முக்கிய பிரச்சனைகளை எழுப்பியதால் காரணமாக அவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது. குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி  உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டிருக்கிறது என்ற குற்றசாட்டு என்பது தொடர்ந்து வைக்கப்பட்டு  வந்தது.

இந்த பிரச்சனையானது கடந்த 10 நாட்களுக்கு மேலாக நாடாளுமன்றத்தில் ஒழித்து கொண்டிருக்கிறது. எதிர்கட்சிகளை பொறுத்தவரையில் ஒன்றிய அரசு தான் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த பிரச்சனை குறித்து விவாதம் நடத்தப்படவேண்டும், அந்த விவாதத்தின் போது பிரதமர் நரேந்திரமோடி அல்லது உள்த்துறை அமைச்சர் அமித்ஷா இதற்க்கு தெளிவான விளக்கமளிக்க வேண்டும், அல்லது நாங்கள் நாடாளுமன்றத்தை இயங்க விடமாட்டோம் என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சையை எழுப்பி வந்தனர்.

இதன் காரணமாக நாடாளுமன்ற அலுவல்கள் குறிப்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் முடங்கியுள்ளது. இன்றைக்கு 12-வது நாளாக மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடங்கிய உடனெவே எதிர்க்கட்சிகள் இந்த பெகாசஸ் பிரச்னையை எழுப்பினர். அப்போது மாநிலங்களவை உறுப்பினர்களிடம் அவை தலைவர் வெங்கையா நாயுடு எச்சரித்தார். இது போன்று தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால் அவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால் அதனை தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். முதலில் அவை ஒத்திவைக்கப்பட்டது. அதை தொடர்ந்தும் எதிர்க்கட்சி எம்பிக்கள்  இதே பிரச்சனையை கூறி அமளியில் ஈடுபட்டதால் டோலோ சென், நதிமுல் ஹக், அபீர் ரஞ்சன் பிஸ்வாஸ், சாந்தா, அர்பிதா கோஸ், மவுசம் நூர் ஆகிய 6 பேரை இடைநீக்கம் செய்து அவை தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளர். மக்களவையில் இதே பிரச்சனையை தொடர்ந்து எதிர்கட்சிகள் எழுப்பி வருகின்றனர்.


Tags : Trinamul Kong ,Amali ,M. RB , Pegasus, State Legislature, Trinamool Cong. MP, suspended
× RELATED “நான் பேசும் போது சம்பந்தமில்லாமல்...