காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே சோழர் காலத்தை சார்ந்த 1000 ஆண்டுகள் முற்பட்ட சப்த மாதர்கள் சிற்ப தொகுப்பு கண்டெடுப்பு..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே சோழர் காலத்தை சார்ந்த 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுவர் அன்னையர் எனப்படும் சப்த மாதர்கள் சிற்ப தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவைஆதன் தலைமையில் நடந்த கள ஆய்வில் அணைக்கட்டு செல்லும் சாலையில் அனுமந்தண்டலம் கிராமத்தில் இந்த சிற்ப தொகுப்பை கண்டறிந்துள்ளனர். ஒரே பலகை கல்லில் ஒன்றரை அடி உயரமும், நான்கரை அடி நீளத்துடன் அழகிய வேலைப்பாடுகளுடன் சப்த மாதர் கன்னிகள் அமர்ந்த நிலையில், இரண்டு கரங்களுடன் அவரவர் ஆயுதங்கள், சின்னங்கள் மற்றும் அணிகலன்களுடன் வசீகரம் செய்கின்றன.

இந்த சிற்ப தொகுப்பு  சோழர் காலத்தை சார்ந்த 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது தொல்லியல் ஆய்வில் தெரியவந்துள்ளது. சோழர், பாண்டியர், பல்லவர் மற்றும் விஜயநகர் மன்னர்கள் ஆட்சிகளில் சிறந்த வழிபாடாக எழுவர் கன்னியர் சிற்பங்கள் இருந்துள்ளதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் பெருமிதம் கூறுகின்றனர். கலைப்பொக்கிஷங்களை பாதுகாப்பது நமது கடமை என்றும் வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். பழைய வரலாற்றை நிகழ்கால சமூகத்திற்கு பறைசாற்றும் அடையாள சின்னமாகும் இவை பார்க்கப்படுகிறது.

Related Stories: