ஆக.13-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்; தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியீடு; தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு

சென்னை: சட்டப்பேரவையில் வரும் 13-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இந்திய அரசமைப்பு பிரிவு 174(1)-ன் கீழ் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் கூட்டத்தை 2021-ம், 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 13-ம் நாள் வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை வாலாஜ சாலை, ஓமந்தூரார் அரசின் தோட்டம் கலைவாணர் அரங்கம் 3-வது தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 181(1)-ன் கீழ் 2021-2022-ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையினை 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 13-ம் 13-ம் நாள் வெள்ளிக்கிழமை அன்று பேரவை அளிக்க வேண்டும் என்று ஆளுநர் நாள் குறித்துள்ளார்கள். 2021 - 2022-ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 13-ம் நாள் வெள்ளிக்கிழமை, காலை 10.00 மணிக்கு பேரவைக்கு அளிக்குபெறும் என கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளையறிக்கையை  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வரும் 9ஆம் தேதி வெளியிடுகிறார். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் போது அரசின் நிதிநிலை விவரங்களை நிதியமைச்சர் வெளியிட உள்ளார். 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார். அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் கல்வி படிப்புகளில் 7.5% ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பை தொடர்ந்து பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டப்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வடிவு நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும்.

Related Stories:

>