பந்தலூரில் வங்கி கிளை முன்பு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்-தொற்று பரவும் அபாயம்

பந்தலூர்  : பந்தலூரில் வங்கி கிளை முன்பு சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பந்தலூரில் செயல்பட்டு வரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளனர்.

முதியோர் உதவித்தொகை, பணி ஓய்வுபெற்ற  தோட்டத்தொழிலாளர்களின் பென்சன், அரசு ஊழியர்கள் பென்சன் உள்ளிட்ட பலரும் வங்கி சேவையை பயன்படுத்துவதற்காக வங்கி கிளை முன்பாக தினமும் நீண்டவரிசையில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் காத்திருக்கின்றனர். இதனால், கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் வரிசையில் காத்திருப்பவர்கள் மயக்கம் அடைந்து கீழே விழும் நிலையும் ஏற்படுகிறது.

எனவே, வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களை வரிசையில் நிற்க வைக்காமல் டோக்கன் முறையை பின்பற்றி குறிப்பிட்ட நேரங்களில் வங்கிக்கு வருவதற்கு வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: