பள்ளிபாளையம் வேளாண் கிடங்கில் 25,260 கிலோ நெல்விதைகள் இருப்பு

பள்ளிபாளையம் :கால்வாய் பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் முளைப்பு திறன் அதிகம் கொண்ட 25,260 கிலோ சான்று பெற்ற நெல்விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார். மேட்டூர் கிழக்கு கரை கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளிபாளையம் வட்டாரத்தில் உள்ள 11 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் நெல் நடவு செய்யப்படும்.

கால்வாய் பாசன விவசாயிகளின் பயன்பாட்டிற்காக, பள்ளிபாளையம் வேளாண்மை துறையின் மூலம் 25,260 கிலோ நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என, பள்ளிபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். ஐஆர்-20, மேம்படுத்தப்பட்ட வெள்ளைப்பொன்னி, டிகேஎம்-13, பிபிடி ஆகிய ரக நெல்விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தி நாற்று விடுவதால், விதைகளின் முளைப்பு திறன் அதிகம் இருக்கும் எனவே, விதைகள் தேவைப்படும் விவசாயிகள் விரைந்து வந்து பெற்றுக்கொள்ளலாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: