×

தமிழ்நாட்டில் கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் 7, 8-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் அறிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 7 8-ம் தேதிகளில்  கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல்லில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு தென்மேற்கு, வடக்கு, மத்திய மேற்கு அரபிக்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று, நாளை நீலகிரி, கோவை, சேலம் மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சின்னக்கல்லாரில் 2 செ.மீ., நடுவட்டம், தேவலா, பந்தலூர், வால்பாநையில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

6-ம் தேதி புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் 07ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயம்பத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும். மேலும் அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனையடுத்து 04 முதல் 07-ம் தேதி வரை தென் மேற்கு வங்க கடல் மற்றும் தென் கிழக்கு இலங்கை பகுதிகள் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்  04 முதல் 07-ம் தேதி வரை தென் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளை செல்ல வேண்டாமென வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Kovai, Tindikkal, Tamil Nadu ,Meteorological Center , Coimbatore, Theni, Nilgiris, Dindigul, heavy rains, weather
× RELATED தமிழகத்தில் நாளை மறுநாள் முதல்...