ஆயுஷ், அலோபதி மருத்துவர்கள் ஓய்வு வயதில் பாரபட்சம் கூடாது: டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: ஆயுர்வேதம், சித்தா உள்ளிட்ட இந்திய முறை, அலோபதி மருத்துவர்களுக்கு வெவ்வேறு ஓய்வு வயது முறையல்ல என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுடெல்லி மாநகராட்சி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம். அலோபதி மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயதை மட்டும் 60லிருந்து 65ஆக உயர்த்தி உத்தரவிட்டது ஒன்றிய அரசு. 2016 மே 31ல் பிறப்பித்த உத்தரவு ஆயுஷ் எனப்படும் இந்திய முறை மருத்துவர்களுக்கு பொருந்துமா என்று கேள்வி எழுந்தது. ஆயுர்வேத மருத்துவர்களின் முறையீட்டை அடுத்து அவர்களின் ஓய்வு வயதை 65ஆக உயர்த்தி உத்தரவிட்டது ஆயுஷ் அமைச்சகம்.  ஆயுஷ் மருத்துவர்களின் மனுவை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயமும் ஓய்வு வயதை 65ஆக உயர்த்த உத்தரவிட்டது.

Related Stories: