தெலுங்கானாவில் பூஜை செய்வதாக கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பறித்த போலி சாமியார் கைது

நல்லக்கொண்டா: தெலுங்கானாவில் பூஜை செய்வதாக கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பறித்த போலி சாமியார் கைது செய்யப்பட்டிருக்கிறார். கிருஷ்னா மாவட்டம் நந்திகாமாவை சேர்ந்த பட்டதாரியான விஸ்வஷைத்தானியா கடந்த 2002-ம் ஆண்டு சீட்டு பிடிப்பதாக கூறி பொதுமக்களை ஏமாற்றிய புகாரில் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 10 நாட்களில் வெளிவந்த அவர் சாய்பாபா சுயசரிதை, ஜீ டிவி, பூஜா டிவி, பக்தி டிவி, உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் சொற்பொழிவாற்றினார்.

மேலும் பக்க்தர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாக கூறி பணம் வசூலித்ததாகவும் ஹஜ்மப்பூர் கிராமத்தில் ஸ்ரீ சாய் சர்மாவு சாய்மான் ஷி தொண்டு அறக்கட்டளை மூலம் யாகம், பூஜைகள் செய்வதாக கூறி பல அப்பாவி பொது மக்களை ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது. வன மூலிகைகள், லேகியம்,எண்ணெய்கள், மற்றும் போலி எந்திரங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து மக்களை ஏமாற்றிய சைதன்யா பல பெண்களுடன் தவறான உறவு கொண்டதாக புகார் எழுந்தது.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரி அடிப்படையில் சாய் விஸ்வஷைத்தானியா மற்றும் அவரது கூட்டாளிகளை  கைது செய்த நல்லகொண்டா போலீசார் அவர்களிடம் இருந்து 26 லட்ச ரூபாய் பணம், தங்க நகைகள், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நிறைந்த வாய்ப்பு நிதிக்கான பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>