மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடந்த மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2013 செப்டம்பரில் தமிழகத்தையே உலுக்கிய மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கியது முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நிலத்தகராறு தொடர்பாக கூலிப்படையினர் மூலம் நரம்பியல் நிபுணரான மருத்துவர் சுப்பையா 2013ல் கொலை செய்யப்பட்டார். தண்டனை விவரம் இன்று மதியம் அல்லது பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>