இமாச்சலப் பிரதேசத்தில் தொடரும் நிலச்சரிவுகள்!: மணலில் புதைந்து கூலித்தொழிலாளி உயிரிழப்பு..!!

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் நிலச்சரிவுகளால் உயர் நிலங்களில் வசித்து வரும் மக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். சில நாட்களாக இமாச்சலில் ஏற்பட்ட மேகவெடிப்பு எதிரொலியாக 5க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெருமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டன. கடந்த சில நாட்களாக இமாச்சலப் பிரதேசத்தில் மழை குறைந்திருக்கும் நிலையில் நிலச்சரிவுகள் தொடர்கதை ஆகி வருகின்றன. நேற்று மட்டும் 2 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. தேசிய நெடுஞ்சாலை 707 - ல் ஏற்பட்ட நிலச்சரிவால் நஹான் - குமார்ஹட்டி சாலையில் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு பாறைகள் சரிந்து விழுந்துள்ளன.

அருகிலிருந்தவர்கள் அச்சத்தோடு அங்கிருந்து ஓடி உயிர் பிழைத்தனர். சாலைகளை வியாபித்துள்ள பாறைகள் மற்றும் டன் கணக்கான மண்ணை அகற்றும் பணியில் மாநில பேரிடர் மேலாண் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சோலன் மாவட்டத்தில் பர்வனோ என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் கூலித்தொழிலாளி ஒருவர் மணலில் புதைந்து உயிரிழந்துள்ளார். இடிபாடுகளில் சிக்கிய இதர தொழிலாளர்களை உள்ளூர் மக்கள் உதவியுடன் பேரிடர் மேலாண் படையினர் மீட்டுள்ளனர்.

Related Stories: