சிவகங்கையில் 34 வினாடியில் 23 அடி உயரம் கயிறு ஏறி சிறுவன் சாதனை

சிவகங்கை : சிவகங்கையில் 34 வினாடிகளில் 23 அடி உயரம் கயிறு ஏறி ஐந்து வயது சிறுவன் சாதனை படைத்தான். சிவகங்கை அருகே சூரக்குளம் கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் - கற்பகவள்ளி தம்பதியின் இரண்டாவது மகன் சாலிவாகனன் (5). கடந்த ஆண்டு சாலிவாகனன் பெற்றோர் மரத்தடியில் சேலையை ஊஞ்சல் ஆடுவதற்காக கட்டி உள்ளனர்.

 சாலிவாகனின் அக்கா யாழரசி ஊஞ்சல் ஆடும்போது சாலிவாகனன் மட்டும் ஊஞ்சல் ஆடாமல் துணியை பிடித்து மேலே ஏறி உள்ளார். இதை தொடர்ந்து கவனித்த சாலிவாகனனின் பெற்றோர், கயிற்றை மரத்தில் கட்டி கொடுத்து ஏறச் சொல்லி பயிற்சி கொடுத்துள்ளனர். இதில் உடனே வேகமாக ஏறி உள்ளார். இந்நிலையில் நேற்று சிவகங்கை தனியார் பள்ளி மைதானத்தில் சாலிவாகனன் இந்த சாதனையை செய்து காட்டினார்.

ஏற்கனவே இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் படி 5 வயது சிறுவன் 60 வினாடியில் 20 அடி உயரம் ஏறியது சாதனையாக உள்ளது. ஆனால் சாலிவாகனன் 34 வினாடியில் 23 அடி உயரம் வரை கயிறு ஏறினார். அவரை சிவகங்கை எஸ்பி செந்தில்குமார் பாராட்டினார்.

Related Stories: