×

மீண்டும் எகிறும் தங்கம் விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.48 உயர்வு..கலக்கத்தில் நகை பிரியர்கள்..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்துள்ளது. தங்கம் விலை கடந்த 2 மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நேரத்தில் அதிகரிப்பதும், அதே வேகத்தில் அடுத்த சில நாட்களில் குறைவதுமான போக்கும் நிலவி வருகிறது. இருப்பினும் மக்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் மட்டும் குறைந்தபாடில்லை. நகை விலையானது குறைந்தாலும், அதிகரித்தாலும் நகை வாங்குவது மட்டும் நின்றபாடில்லை. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,533க்கும் ஒரு சவரன் ரூ.36,264க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.73.10க்கு விற்பனையாகிறது.

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,536க்கும் ஒரு சவரன் ரூ.36,288க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.72.90க்கு விற்பனையானது. தற்போது  ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்திருப்பது நகை பிரியர்களை சற்று கலகத்தில் ஆழ்த்தியுள்ளது. பண்டிகை காலம் என்பதால் நகை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இத்தகைய சூழலில் நகை விலை உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தங்கம் விலை ஒரு நிலையான நிலையில் இல்லாமல் தொடர்ந்து மாற்றம் நீடித்து வருவது நகை வாங்குவோரை குழப்பமடைய செய்துள்ளது. மேலும் அதிக விலைக்கு நகை வாங்கினால், எங்கே இன்னும் விலை குறைந்து விடுமோ என்ற ஏக்கமும் நகை வாங்குவோரிடம் இருந்து வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Chennai , Jumping, gold, price !, Rs 48 rise
× RELATED சென்னையில் இருசக்கர வாகனம் ஓட்டுவோர்...