×

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி நடிகர் தனுஷ் தொடந்த வழக்கில் நாளை தீர்ப்பு

சென்னை: வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி நடிகர் தனுஷ் தொடந்த வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்க தடை விதித்து கேரளா உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரபட்டுள்ளன.

கேரளா உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நுழைவுவரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என கடந்த 2019-ல் தீர்ப்பளித்தது. இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி விதிக்கத் தடைகோரி நடிகர் தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

காருக்கு ரூ.60,66,000 நுழைவு வாரியாக செலுத்த வணிகவரித்துறை உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதற்க்கு தடை விதிக்க வேண்டும் என அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் 50 சதவிகித வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன் பின் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நடிகர் தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகத நிலையில் இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

ஏற்கனவே நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் தொடந்த வழக்கில்அவருக்கு அபராதம் விதித்த உயர்நீதிமன்றம் அவரை விமர்சனம் செய்த நிலையில் நடிகர் தனுஷ் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் விஜய் குறித்த விமர்சனத்தை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் தடை உத்தரவும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Tags : Sagitush , Imported car, entry tax, actor Dhanush
× RELATED ஒப்புகை சீட்டை முழுமையாக எண்ணக் கோரிய...