×

பதிவுத்துறையில் ஜூலை மாதம் ரூ.1242 கோடி வருவாய்

சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், அனைத்து மண்டலங்களிலும் பணி சீராய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், நிலுவை ஆவணங்களை சரியாக இருப்பின் உடன் விடுவித்தல், தணிக்கை இழப்புகளை வசூலித்தல் சரியான ஆவணங்களை தாமதமின்றி பதிவு செய்தல் முதலான உத்திகளை கையாண்டு வருவாயை பெருக்க அமைச்சர் அறிவுறுத்தினார். ஊரடங்கு காரணமாக பதிவுத்துறையில் முந்தைய மாதங்களில் குறைந்திருந்த வருவாய், கடந்த மாதத்தில் ரூ.1242.22 கோடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, கடந்த ஏப்ரலில் ரூ.1077.43, மே ரூ.233.89, ஜூன் ரூ.789.33, ஜூலை ரூ.1,242.22 கோடி வசூலாகி உள்ளது.

Tags : 1242 crore in July
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...