ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனி போல ‘வட இந்திய கம்பெனி’யை உருவாக்க பா.ஜ முயற்சி: கமல்ஹாசன் கடும் தாக்கு

கோவை: கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாஜவின் கொங்குநாடு என்கின்ற கோஷத்தை அரசியல் கோஷமாக பார்க்கிறேன். மக்கள் தேவையாக பார்க்கவில்லை. பாஜ ஒரு பெரிய கம்பெனி. ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனி போல் ‘வட இந்திய கம்பெனியை’ உருவாக்க முயல்கின்றனர். நீங்கள் ஒரு நாடு என்றால் தோளில் தூக்கி வைத்துக்கொள்வோம். வியாபாரத்திற்கு சவுகரியமாக இருக்கும் என எங்கள் வளங்களை தனியாருக்கு தூக்கி கொடுக்க முயன்றால் அது கம்பெனிதான். இந்த சுரண்டலுக்கு எந்த மாநிலமும் இடம் கொடுக்காது. தமிழக வரலாற்றில் நிறைய மக்களின் மனதில் கலைஞருக்கு இடமுள்ளது. இந்தியாவிலேயே அதிகம் இரட்டை வேடம் போட்டு நடித்தவன் நான். எனவே, இரட்டை வேடம் போடுபவர்களை நான் சட்டென்று கண்டுபிடிப்பேன். மேகதாது விவகாரத்தில் பாஜ இரட்டை வேடம்தான் போடுகின்றது. போராடும் இருவருக்கும் வேறு வேறு பெயர்கள் இருந்தாலும் இருவருமே மத்திய அரசின் பொம்மைகள்தான். இவ்வாறு கமல் கூறினார்.

Related Stories: