5 ரவுடிகள் கைது

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும்படி எஸ்பி சுதாகர் உத்தரவிட்டார். அதன்பேரில் பாலுச்செட்டிசத்திரம் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ரவுடிகளை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி அருகே சந்தேகப்படும்படி சிலர் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு போலீசார், அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது, திருவேற்காடு பகுதியை சேர்ந்த ரவுடி ராம்பிரகாஷ் (23), வீட்டில் பதுங்கி இருந்த திருவேற்காட்டை சேர்ந்த ஜெய்சதீஷ் (23), செந்தில் (23), ராபர்ட் கிளைவ் (23), பாலசந்தர் (19) ஆகியோரை கைது செய்து, காவல்நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில், அவர்கள், குற்றச் சம்பவங்களில் ஈடுபட திட்டமிட்டு பதுங்கி இருந்தது தெரிந்தது. அவர்களிடம் இருந்து கத்தி உள்பட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பெரிய அசம்பாவித சம்பவம் நடக்கும் முன், 5 பேரை கைது செய்த போலீசாரை, உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Related Stories:

>