டிரைவர் மர்மச்சாவு

ஆவடி: அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் மேற்கு பாலாஜி நகரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(35). கார் டிரைவர். இவரது மனைவி நந்தினி(29). தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிரத்திக்‌ஷா(8) என்ற மகள் உள்ளார். ராஜேஷ்குமார் அடிக்கடி வேலை முடிந்து வீட்டுக்கு குடித்துவிட்டு வருவது வழக்கம். இதனால், விரக்தியடைந்த நந்தினி, மகளுடன் மணலியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். ராஜேஷ்குமார் வீட்டில் தனியாக இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜேஷ்குமார், வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த, அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர். புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>