2 கடைகளில் கொள்ளை

புழல்: புழல் அடுத்த கதிர்வேடு பகுதியை சேர்ந்தவர் ராமநாதன்(36). தனது வீட்டின் அருகில் காய்கறி மற்றும் மளிகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் கடை திறக்க வந்தார். அப்போது, கடையின் ஷட்டரை உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த ரூ.7 ஆயிரம் ரொக்கம் கொள்ளைபோனது தெரியவந்தது. இதேபோல், புழல் அடுத்த புத்தாகரம் சந்தோஷ் நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் ராஜேஷ்(33). அதே பகுதியில்,  மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாவில் இருந்த ரூ.500 கொள்ளைபோனது. இந்த இரு கொள்ளை சம்பவம் குறித்து புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

Related Stories:

>