ஷேர் ஆட்டோ கவிழ்ந்து 7 பெண்கள் படுகாயம்

பொன்னேரி: மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு. இவருக்கு சொந்தமான ஷேர் ஆட்டோவில் நேற்று காட்டூர், திருவெள்ளைவாயல் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மீன் வியாபாரம் செய்யும் பெண்கள் பழவேற்காடு மீன் மார்க்கெட் நோக்கிச்சென்றனர். இடையன்குளம் பேருந்து நிலையம் அருகே ஆட்டோ சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஷேர் ஆட்டோ சாலையை விட்டு இறங்கி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் பள்ளத்தின் முட்புதரில் சிக்கிக்கொண்ட 7 பெண்கள் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கூச்சலிட்டனர். இதனை கண்ட வாகன ஓட்டிகள், அந்த பெண்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொரோனா ஊரடங்கின்போது விதியை மீறி அதிக பயணிகளுடன் சென்றதே விபத்துக்கு காரணம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories:

>