இன்ஜினியர் தற்கொலை

ஆவடி: அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, 31வது தெருவை சேர்ந்தவர் சூரியபிரகாசம்(28). கம்ப்யூட்டர் இன்ஜினியர். இவரது மனைவி ஸ்ரீஷா(23). தம்பதிக்கு சஞ்சீவ்(6), அச்சு(3) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளன. சூரியபிரகாஷ் வேலை முடிந்ததும் அடிக்கடி வீட்டுக்கு மது அருந்தி விட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். இதனால் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலை சூரியபிரகாஷ், குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். ஸ்ரீஷா கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ஸ்ரீஷா கோபித்துக்கொண்டு குழந்தைகளுடன் அருகிலுள்ள மாமியார் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த சூரியபிரகாஷ், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories:

>