செல்போன் பறிப்பை தடுத்தவருக்கு கத்திக்குத்து

கும்மிடிப்பூண்டி: கொல்கத்தாவை சேர்ந்தவர் மஜிந்தர்(21). கும்மிடிப்பூண்டி அடுத்த எகுமதுரை என்ற பகுதியில் நாகூர் என்பவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கிறார். இவர், ஸ்ரீசிட்டி தொழிற்பேட்டையில் வேலை பார்க்கிறார். இந்நிலையில் மஜிந்தர், நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டிற்கு வெளியே நின்றபடி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 3 வாலிபர்கள் அவரை மறித்து அவரது செல்போனை பறித்தனர். இதனை பார்த்து அவர்களை தடுக்க வந்த நாகூர் என்பவரை அவர்கள் கத்தியால் குத்தி செல்போனுடன் தப்பிச்சென்று விட்டனர்.

Related Stories:

>