×

துப்பாக்கி சூடு சம்பவம் பென்டகன் திடீர் மூடல்

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அருகே பலமுறை துப்பாக்கி சூடு நடந்ததால் தற்காலிகமாக மூடப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தின் ஆர்லிங்டன் கவுண்டியில் அந்நாட்டின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அமைந்துள்ளது. இந்நிலையில், பென்டகன் நேற்று தனது டிவிட்டரில், ``பென்டகன் மெட்ரோ பஸ் நிலையம் அருகே பென்டகன் போக்குவரத்து மையப் பகுதியில் பலமுறை துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பென்டகன் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது,’’என்று தெரிவித்துள்ளது.


Tags : Pentagon , Pentagon closes after shooting
× RELATED அரசு படைக்கு ஆதரவாக ஆப்கானிஸ்தானில்...