×

முதல் டெஸ்ட் இன்று தொடங்குகிறது இந்தியா - இங்கிலாந்து பலப்பரீட்சை

நாட்டிங்காம்: இந்தியா - இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி, நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஜூன் மாதம் நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நியூசிலாந்திடம் தோற்ற இந்தியா, ஒன்றரை மாத  ஓய்வுக்கு பிறகு இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்  2வது சீசனின் முதல் தொடர் என்பதால், வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் முனைப்புக் காட்டும்.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணியில் மயாங்க், கில், சுந்தர் காயம் காரணமாக விலக நேரிட்டது சற்று பின்னடைவை கொடுத்துள்ளது. இங்கிலாந்து கவுன்டி தொடரில் கலக்கிய ஆல் ரவுண்டர் அஷ்வின்  அணிக்கு பலமாக இருப்பார். இங்கிலாந்து அணிக்கும், ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மனச்சோர்வு காரணமாக கடைசி நேரத்தில் விலகியது பின்னடைவு தான். எனினும், அனுபவ வேகம் ஆண்டர்சன், பிராட்  ஆகியோர் வழக்கம் போல் இந்திய அணியை அச்சுறுத்தக்கூடும். சொந்த மண்ணில் விளையாடுவதும் இங்கிலாந்துக்கு சாதகமாக இருக்கும்.  

அட்டவணை
தேதி    போட்டி    களம்
ஆக. 4-8    முதல் டெஸ்ட்    நாட்டிங்காம்
ஆக. 12-16    2வது டெஸ்ட்    லண்டன்
ஆக. 25-29    3வது டெஸ்ட்    லீட்ஸ்
செப். 2-6    4வது டெஸ்ட்    லண்டன்
செப். 10-14    5வது டெஸ்ட்    மான்செஸ்டர்

* இதுவரை...
இங்கிலாந்து - இந்தியா 34 டெஸ்ட் தொடர்களில் மோதியுள்ளன. அவற்றில் இங்கிலாந்து 19, இந்தியா 11ல் வென்றுள்ளன. 4 தொடர்கள் டிராவில் முடிந்தன. மொத்தம் 126 டெஸ்டில் மோதியுள்ளதில் இங்கிலாந்து 48, இந்தியா 29ல்  வென்றுள்ளன. எஞ்சிய 49 டெஸ்ட் டிராவானது.

* கடைசியாக...
இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 டெஸ்டில் இந்தியா 3, இங்கிலாந்து 2ல் வென்றுள்ளன. கடைசியாக இந்தியாவில் நடந்த தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்தியாவும் (4 போட்டி), இங்கிலாந்தில் நடந்த தொடரை 4-1 என இங்கிலாந்தும் வென்றுள்ளன.

* இந்தியா: கோஹ்லி (கேப்டன்), ரோகித், ரகானே, புஜாரா, ஆர்.அஷ்வின், கே.எல்.ராகுல், ஷமி, பும்ரா, ஜடேஜா, சிராஜ், அக்சர், இஷாந்த்,   அபிமன்யூ ஈஸ்வரன் (அறிமுகம்), பிரித்வி ஷா, ஹனுமா விஹாரி, உமேஷ், சூர்யகுமார் (அறிமுகம்), ஷர்துல் தாகூர், சாஹா (விக்கெட் கீப்பர்), ரிஷப் பன்ட்.
இங்கிலாந்து: ஜோ ரூட் (கேப்டன்),  ஆண்டர்சன், பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), பெஸ், பிராட்,  பர்ன்ஸ், பட்லர் (விக்கெட் கீப்பர்),  கிராவ்லி, சாம் கரன், அசீப் அமீத், டேனியல் லாரன்ஸ், கிரெய்க் ஓவர்டன், ஆலிவர் போப், ஆலிவர் ராபின்சன், டொமினிக் சிப்லி, மார்க் வுட்.

Tags : India ,England , The first Test starts today between India and England
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...