மகளிருக்கான இரு சக்கர வாகன திட்டம் தொடரும்: அமைச்சர் தகவல்

சென்னை: அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிருக்கான இரு சக்கர வாகன திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறினார். இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நூறு நாள் வேலை திட்டத்திற்கு ரூ.300 கொடுப்பதற்கான திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் முதலமைச்சர் நிறைவேற்றுவார். மாநகராட்சிகளுக்கு அருகே உள்ள சில ஊராட்சிகள், மாநகராட்சியுடன் இணைய விருப்பம் தெரிவிப்பதாகவும், அதுகுறித்து முதலமைச்சர் முடிவு செய்வார். ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

ஒரு சிலர் மொத்தனமாக உள்ளாட்சி பணிகளை எடுத்து காலதாமதமாக மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கால தாமதமானால் டெண்டர் ரத்து செய்யப்படும் எனவும் திட்டவட்டமாக அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் ஜல் ஜீவன் திட்டத்தில் பணிகள் தரமாக இல்லை என புகார்கள் வந்துள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மீது காழ்ப்புணர்ச்சி இல்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிருக்கான இரு சக்கர வாகன திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். நிதி நிலைமையை வைத்து அந்த திட்டம் விரிவுபடுத்துவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: