இளம்பெண்ணிடம் ரூ.90 ஆயிரம் லஞ்சம் பெண் எஸ்ஐ சஸ்பெண்ட்

நாகை:  நாகை  மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்தவர் உமா (20). இவர், பிரிந்து சென்ற தனது  கணவருடன் சேர்த்து வைக்க கோரி நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த  சில மாதங்களுக்கு முன் புகார் செய்தார். புகாரை பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்  வேம்பு, பிரிந்து சென்ற கணவருடன் சேர்த்து வைக்க ரூ.1 லட்சம் லஞ்சம்  கேட்டார். அவ்வளவு தொகையை தர உமா மறுத்ததாகவும், பின்னர் ரூ.95 ஆயிரம்  கொடுக்க உமா சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் உமா தரப்பில்  இருந்து பணம் வராத காரணத்தால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது

இந்நிலையில்  கடந்த சில தினங்களுக்கு முன்பு உமா மீண்டும் நாகை அனைத்து மகளிர் காவல்  நிலையம் வந்தார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு, ஏற்கனவே  ஒப்புக்கொண்டபடி ரூ.95 ஆயிரத்தை உமாவிடம் கேட்டார். இதை தனது செல்போனில்  பதிவு செய்த உமா, காவல்துறை உயரதிகாரிக்கு ஆதாரத்துடன் புகார் அளித்தார்.  இந்த புகாரை விசாரித்த திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், லஞ்சம்  கேட்ட பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேம்புவை சஸ்பெண்ட் செய்து நேற்று  உத்தரவிட்டார்.

Related Stories: