×

பதிவுத்துறையில் ஜுலை 2021 மாதம் ரூ.1,242.22 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது: தமிழக அரசு தகவல்..!

சென்னை: பதிவுத்துறையில் ஜுலை 2021 மாதம் ரூ.1,242.22 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது சென்ற நிதியாண்டில் ஜுலை 2020 மாத வருவாயை காட்டிலும் ரூ.598  கோடி அதிகமாகும். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையிலும், பதிவுத்துறை அரசு செயலாளர் மற்றும் பதிவுத்துறை தலைவர் அவர்கள் முன்னிலையிலும் அனைத்து மண்டலங்களிலும் பணி சீராய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டங்களில் அரசின் வருவாயை எவ்வித கசிவுமின்றி வசூலிக்க முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், நிலுவை ஆவணங்களை சரியாக இருப்பின் உடன் விடுவித்தல், தணிக்கை இழப்புகளை வசூலித்தல் சரியான ஆவணங்களை தாமதமின்றி பதிவு செய்தல் முதலான யுக்திகளை கையாண்டு வருவாயை பெருக்க அறிவுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் அலுவலர்கள் செயல்பட்டதின் பேரில், இம்மாதத்தில் வருவாய்  ரூ.1242.22 கோடி ஈட்டப்பட்டுள்ளது.

கொரானா நோய் தொற்று காரணமாகவும் மற்றும் அரசின் ஊரடங்கு காரணமாகவும் பதிவுத்துறையில் கடந்த மாதங்களில் வருவாயானது  2019-20 நிதியாண்டை காட்டிலும் குறைந்துள்ள நிலையிலும், ஜுலை 2021 மாத வருவாயானது மேலே கண்டுள்ள முயற்சிகளால் பேரிடர் ஏதும் இல்லாத காலத்திற்கான வருவாயினை நெருங்கியுள்ளது இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : 1,242.22 crore in July 2021: Government of Tamil Nadu
× RELATED தமிழ்நாட்டில் அமைதியாக நடந்து...