திருக்கோஷ்டியூர் கோயிலில் ஆடிப்பூர உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் கோயிலில் ஆடிப்பூர உற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் திருக்கோயிலில் ஆடி பிரம்மோற்சவம், ஆண்டாள் திருவாடிப்பூரம் உற்சவ வழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை மேதினி பூஜைகள், நகர சோதனை (சேனை முதல்வர் புறப்பாடு) நடைபெற்றது. நேற்று காலை பெருமாள், ஆண்டாள் கருங்கல் மண்டபம் எழுந்தருளல் நடைபெற்றது. தெர்டர்ந்து 10.20 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. அதனை தொடர்ந்து பால், சந்தனம், மஞ்சள், தயிர் உள்ளிட்ட திரவியங்களால் கொடிமரத்திற்கு விசேஷ அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் மாலையில் மட்டும்  ஆண்டாள், பெருமாள் புறப்பாடு உள்பிரகாரத்தில் நடைபெறுகிறது. கோயில் சிப்பந்திகள் வைத்து உற்சவம் நடைபெறும். பத்தாம் திருநாளான ஆண்டாள் திருநட்சத்திரம் பிறந்த நாள் அன்று மட்டும் தங்கப்பல்லக்கில் பெருமாளும், ஆண்டாளும் (தேர் அலங்காரத்தில்) எழுந்தருளி கோயில் உள் பிரகாரத்தில் புறப்பாடு நடைபெறும். பெருமாள், ஆண்டாள் புறப்பாடு அனைத்தும் கோயில் உள்பிரகாரத்தில் (தென்னமரத்தடி பிரகாரம்) நடைபெறும். தமிழக அரசின் உத்தரவின்படி கோயிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: