பட்டிவீரன்பட்டி அருகே கோயில் கதவில் சுற்றியிருந்த பாம்பால் பரபரப்பு

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே அம்மன் கோயில் கதவில் சுற்றியிருந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கிராமத்தில் கோட்டைப்பட்டி தெருவில் துர்க்கை அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் மிகவும் பழமையான கோயிலாகும். இந்த கோயிலில் உள்ள துர்க்கை அம்மன் சன்னதியின் முன்புற இரும்பு கதவை நேற்று காலை கோயில் பூசாரி கண்ணன் திறப்பதற்காக வந்தபோது, கதவில் பச்சைப்பாம்பு கதவை திறக்க விடாமல் கதவை சுற்றி படுத்து இருந்தது.

இந்த பாம்பை அங்கிருந்து அப்புறப்படுத்த முடியவில்லை. காலை முதல் இரவு வரை அந்த கதவிலேயே இருந்தது. இந்த செய்தி ஊர் முழுவதும் பரவியது. ஊர் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து அம்மனை வணங்கி சென்றனர். கோயில் முன்பு கதவில் காலை முதல் இரவு வரை  திறக்க விடாமல் பாம்பு இருந்தது இப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Related Stories: