கேரள எல்லையில் தீவிர பரிசோதனை: கொரோனா நெகடிவ் சான்று இருந்தால் தமிழகத்துக்குள் அனுமதி

கூடலூர்: கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், குமுளி வழியாக தமிழகத்துக்கு வருபவர்களிடம் கொரோனா நெகடிவ் சான்று உள்ளதா என சுகாதாரத்துறையினர், போலீசார் மற்றும் வருவாய்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் தமிழக எல்லைப்பகுதிகளாக குமுளி, கம்பம்மெட்டு போடிமெட்டு ஆகிய ஊர்கள் உள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தை அடுத்துள்ள கேரள மாநிலத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தேனி மாவட்ட எல்லைகள் வழியாக தமிழகத்திற்கு வரும் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட கோவிட் நெகடிவ் சான்று அல்லது கொரோனா தடுப்பூசி (2 தவணை) செலுத்தப்பட்டத்தற்கான சான்று வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேனி கலெக்டர் முரளிதரன் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து தமிழக எல்லையான குமுளி சோதனைச்சாவடியில் சுகாதார துறையினர், காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் கேரளாவிலிருந்து வருபவர்களிடம் கொரோனா நெகடிவ் சான்றிதழ் உள்ளதா என சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். இது குறித்து கேரள அதிகாரிகள் கூறுகையில், ‘‘கேரளாவில் கடந்த 17ம் தேதி முதல் ஆர்டிபிசிஆர் கோவிட் நெகடிவ் சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இப்போது தமிழகப்பகுதியிலும் நெகடிவ் சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது வரவேற்கக்தக்கது.

இதனால் இருமாநிலத்திற்குள்ளும் தேவையற்ற மக்கள் போக்குவரத்து குறைக்கப்படும். மிக முக்கிய மற்றும் அவசர காரணங்களுக்கு மட்டுமே மகக்ள் செல்வார்கள். இதனால் கொரோனா தொற்று பரவல் குறையும்’’ என்றனர்.

Related Stories:

>