இருக்கன்குடி கோயிலில் தூய்மை பணி துவக்கம்

சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தூய்மை பணி துவங்கியது. கெரோனா மூன்றாம் அலையை தடுக்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் உத்தரவின்படி ஆக. 2 முதல் 4ம் தேதி வரை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் முழுத்தூய்மை இயக்கம் நடத்தப்பட்டு கர்ப்பகிரகம், பிரகாரங்கள், திருக்குளங்கள் உள்ளிட்டவை தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன.

மதுரை இணை ஆணையர் மண்டலத்திற்குட்பட்ட விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று பெருந்தூய்மை பணி கோயில் உதவி ஆணையர் கருணாகரன் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் ராமமூர்த்தி பூசாரி, சௌந்தரராஜன் பூசாரி, கண்ணன் பூசாரி ஆகியோர் முன்னிலையில் தொடங்கப்பட்டது. கோயில் தூய்மை பணியாளர்கள் மற்றும் வெளிமுகமை தூய்மை பணியாளர்கள் 50 நபர் மூலம் கோயிலை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. இப்பணி நாளை வரை நடைபெறுகிறது.

Related Stories: