திருமணம் செய்து கொள்வதாக கூறி ‘ஹெச்ஆர்’ மேலாளர் பலாத்காரம்: ஏற்கனவே திருமணமான குற்றவாளி தலைமறைவு

புனே: புனேயில் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஹெச்ஆர் மேலாளரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் புனே அடுத்த பாராமதியை சேர்ந்தவர் நிலேஷ் அரவிந்த் மோரே (31). இவருக்கு, புனேவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனித வளத்துறை (ஹெச்ஆர்) மேலாளராக பணியாற்றிய 27 வயதான இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. சில மாதங்களுக்கு பின் நட்பு காதலாக மாறியது. அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, சில இடங்களுக்கு அரவிந்த் மோரே அழைத்து சென்றுவந்துள்ளார். இருவரும் ஜாலியாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில், அரவிந்த் மோரேவுக்கு ஏற்கனவே திருமணம் ஆன விசயம், அந்த பெண்ணுக்கு தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர் ஹடாப்சர் போலீசில் புகார் அளித்தார். அதில், ‘என்னைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறிய அரவிந்த் மோரே, என்னிடம் பலமுறை உடல் ரீதியான உறவை வைத்துக் கொண்டார். சில மாதங்களுக்கு பின், திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய போது, அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். அவரது விபரங்களை கேட்டறிந்தபோது, அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன விசயம் தெரியவந்தது. என்னை ஏமாற்றியது குறித்து அவரிடம் கேட்ட போது, நடந்த விசயத்தை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்று அச்சுறுத்தினார்.

மேலும், என்னை நான் வசிக்கும் இடத்தில் இருந்து வெளியே துரத்தி விடுவதாகவும் மிரட்டுகிறார். எனவே, என்னை ஏமாற்றிய அரவிந்த் மோரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். அதையடுத்து குற்றச்சாட்டப்பட்ட அரவிந்த் மோரே மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375ன் கீழ் போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிந்து, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>