பெண் போலீசுக்கு டார்ச்சர்: ஆண் காவலர் மீது புகார்

பெரம்பலூர்: பெரம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் ஆயுதப்படை பயிற்சி வளாகம் உள்ளது. இங்கு பயிற்சியில் உள்ள 200 போலீசாருக்கு இதே வளாகத்தில் காவலர் குடியிருப்பும் உள்ளது. இந்நிலையில் 23 வயதான இரண்டாம்நிலை பெண் காவலர் ஒருவர், ஆயுதப்படை பிரிவில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வரும் திருமணமான 29 வயதானவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு மாறுதலாகி சென்ற ஆண் காவலர், கடந்த மே மாதம் மீண்டும் பெரம்பலூர் ஆயுதப்படைக்கு மாற்றலாகி வந்தார்.

அப்போது, தனது பழைய பழக்கத்தை புதுப்பித்து கொள்ள மீண்டும் பழகுமாறு தன்னுடன் சேர்ந்து எடுத்து கொண்ட பழைய போட்டோவை காட்டி அந்த பெண் போலீசுக்கு அவர் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவலர், எஸ்பி மணியிடம் நேற்று புகார் மனு அளித்தார். இந்த மனு மீது விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க பெரம்பலூர் மாவட்ட அனைத்து மகளிர் போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார். இதுகுறித்து இருவரிடமும் தனித்தனியாக மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories:

>