ஒலிம்பிக் ஈட்டி எறிதல்: இந்தியாவின் அன்னு ராணி தோல்வி

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டியின் மகளிர் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் அன்னு ராணி தோல்வியடைந்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் மகளிர் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றுப் போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் அன்னு ராணி பங்கேற்றார். இதில் முதல் சுற்றில் 50.35 மீட்டரும், இரண்டாவது சுற்றில் 53.19 மீட்டரும், கடைசி வாய்ப்பான 3 ஆவது சுற்றில் 54.04 மீட்டர் தூரமும் ஈட்டி எறிந்தார். இதனையடுத்து தகுதி பிரிவில் 14வது இடமே அன்னு ராணிக்கு கிடைத்தது.

இதனால் இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற முடியாமல் போனது. இதனால் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு பறிபோனது. கடந்த மார்ச் மாதத்தில் நடந்த 24வது பெடரேசன் கோப்பை சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், அன்னு ராணி 63.24 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து  தேசிய சாதனையை  படைத்திருந்தார். ஆனால் அந்த இலக்கை கூட இன்று அவரால் எறிய முடியவில்லை.

Related Stories: