குடிக்கக்கூடாது என்று மனைவி கண்டிப்பு: கம்ப்யூட்டர் இன்ஜினியர் தற்கொலை

ஆவடி: குடிக்கக்கூடாது என்று மனைவி கண்டித்ததால் கம்ப்யூட்டர் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கொரட்டூர்  வீட்டுவசவதி வாரிய குடியிருப்பு 51வது தெருவை சேர்ந்தவர் சூரியபிரகாஷ்  (28). கம்ப்யூட்டர் இன்ஜினியரான இவர்,  பிளம்பர் மற்றும் எலக்ட்ரிக்கல் வேலை செய்துவந்தார். இவரின் மனைவி ஷா (23). இவர்கள் கடந்த 7  வருடத்துக்கு முன் காதலித்து திருமணம் செய்தனர். தம்பதிக்கு சஞ்சீவ் (6), அச்சு (3) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், சூரியபிரகாஷ் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

நேற்று காலை சூரியபிரகாஷ் குடிபோதையில் வந்தபோது மனைவி கண்டித்ததால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக்கொண்டு ஷா, குழந்தைகளுடன் அருகில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதன்பிறகு சூரியபிரகாஷின் அக்கா கணவர்  சங்கர் வீட்டுக்கு வந்தபோது கதவை பலமுறை தட்டியும் சூரியபிரகாஷ் திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்து சென்று பார்த்தபோது உள்ளே சூரியபிரகாஷ் மின்விசிறி கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு தெரிந்தது. இதுபற்றி கொடுக்கப்பட்ட புகாரின்படி, கொரட்டூர் போலீசார் சென்று சூரியபிரகாஷ் சடலத்தை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Related Stories:

>