திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மீதான விசாரணை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இடைக்கால தடை விதிப்பு

சென்னை: திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மீதான விசாரணை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. பா.ரஞ்சித் மனுவை அடுத்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 2019 ஜூன் 5-ல் நீலப் புலிகள் அமைப்பு சார்பில் நடந்த கூட்டம் ஒன்றில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் பேசினார். கூட்டத்தில் மன்னன் ராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசியதாக பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீஸ் வழக்கு பதிவு செய்தனர்.

Related Stories:

>